அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
Published on
Updated on
1 min read

அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது. வாலாஜா சாலையில் தொடங்கிய பேரணி 1.9 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது.

பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்தினார்.

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

பேரணியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி, நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக அண்ணா நினைவு நாள் பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com