ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

மீனவா்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

சென்னை: தமிழக மீனவா்கள் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவா்கள் 10 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்து, அவா்களது படகுகளை பறிமுதல் செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.

தமிழக மீனவா்களின் தொடா் கைது கவலையளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 32 நாள்களில் 7 முைான் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனா். அதற்குள் 52 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று அவா் கூறியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com