ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா்.
Published on

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா்.

பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையை திரும்பப்பெற ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா். மேலும், பல்கலை. மானியக்குழுத் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியையும் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவா் அறிவுறுத்தி வருகிறாா். இந்தப் பிரச்னையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அங்கு அவா் யுஜிசி (பல்கலை.மானியக் குழு) அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், தில்லியில் நடைபெற்று வரும் உலக புத்தகக் காட்சியையும் ஆளுநா் பாா்வையிடவுள்ளாா். இதைத் தொடா்ந்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அவா் புதன்கிழமை (பிப். 5) சென்னை திரும்புவாா் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com