உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல்: அமைச்சா் விளக்கம்

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளாா்.
Published on

சென்னை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளாா்.

குறிப்பு: அமைச்சா் அர.சக்கரபாணி தலைப்படம் வைக்கலாம்...

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு பதிலளித்து அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமை கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டது. தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் மூலம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் செய்யும் நிலையம் திறந்து,

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 2014-ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 2016-ஆம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தேவையான இடங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தவிர தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையத்தின் கோரிக்கையை பரிசீலித்து ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில்தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல்லுக்கான ஊக்கத் தொகையும் ஒன்றாகவே உள்ளது என்று அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com