
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
இதன்காரணமாக வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிகமான ரத்தம் தேவைப்பட இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனால் கத்திக் கூச்சலிட்ட கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார். ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாக இருந்துள்ளது.
உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.