அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகம் .
அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகம் .கோப்புப்படம்

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனா். செவ்வாய்க்கிழமை தைப்பூச தினத்தன்று பொது விடுமுறையாக இருந்தாலும், அந்த

நாளில் ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, முந்தைய ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க அனைத்து பதிவு அலுவலகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணம் சோ்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com