வங்கிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்! தெரியாவிட்டால் பாக்கெட் காலி!!

வங்கிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து தெரியாவிட்டால் பாக்கெட் காலியாகிவிடும்.
வங்கிப் பணி
வங்கிப் பணி
Published on
Updated on
1 min read

இந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சத் தொகை அதிகரிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது என நிதித்துறை சார்ந்த தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

இதற்கிடையே வங்கிகளும் தங்கள் பங்குக்கு, வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு, ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

அதன்படி, எஸ்பிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ரூ.3000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியும், குறைந்தபட்ச கையிருப்பை ரூ.1000-லிருந்து ரூ.3,500 ஆக அதிகரித்துள்ளது. கனரா வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகையானது ரூ.1000 ஆக இருந்து வந்த நிலையில் அது தற்போது ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த வங்கிகளில், குறிப்பிட்ட இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு, குறைந்திருக்கும் தொகையிலிருந்து மெல்ல அபராதத் தொகை பிடிக்கப்பட்டு, உங்கள் இருப்புத் தொகை மொத்தமும் காலியாகிவிடும் அபாயமும் உள்ளது.

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள்

இந்த மாதம் முதல், மாநகரப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் மூன்று முறை பணமெடுக்கலாம். அதன்பிறகு ஒவ்வொரு முறை ஏடிஎம்மில் பணமெடுக்கவும் ரூ.25 வசூலிக்கப்படும். இதற்கு முன்பு இது ரூ.20 ஆக இருந்தது.

ஒருவேளை, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத ஏடிஎம்களில் பணமெடுத்தால் இந்த கட்டணம் ரூ.30 ஆக வசூலிக்கப்படும். இதுவே புறநகர்ப் பகுதிகளாக இருந்தால் ஏடிஎம்களில் 5 முறை கட்டணமின்றி பணமெடுக்கலாம்.

கோடாக் மகிந்திரா வங்கி

கோடாக் மஹிந்திரா வங்கி தனது 811 சேமிப்புக் கணக்கில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் தலா 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இனி, ஏடிஎம் நிராகரிப்பு கட்டணம் கோடாக் அல்லாத ஏடிஎம்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதுபோன்று மேலும் சில தனியார் வங்கிகளும், தங்களது பல்வேறு சேவைக் கட்டணங்களை மாற்றியமைத்திருக்கிறது. விதிகளையும் திருத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com