வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்

சென்னையில் பிப். 17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி வருகிறார்.

Mata Amritanandamayi

மாதா அமிர்தானந்தமயி

Published On :

சென்னையில் வரும் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக மாதா அமிர்தானந்தமயி வருகிறார்.

மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையில் பிப்ரவரி 17, 18 (திங்கள், செவ்வாய்) தேதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

விருகம்பாக்கத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் பகல் 11 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொள்கிறார்.

அவரது வழிகாட்டுதலின்படி தியானம், பஜனை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மாதா அமிர்தானந்தமயி தரிசனம் நடைபெறும்.

இரண்டு நாள் நிகழ்ச்சியான இவ்விழாவின் ஒரு பகுதியாக, பிரம்மஸ்தானம் திருக்கோயிலில் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கரூரில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் மாதா அமிர்தானந்தமயி . அங்கு அவரின் அருளுரை, தியானம் மற்றும் பஜனையைத் தொடர்ந்து தரிசன நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

பின்னர் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார்.

விவரங்களுக்கு 044-2376 4063 மற்றும் 2376 4867 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.