மத்திய அரசு
மத்திய அரசு

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரில் போலியாக ஆள்சோ்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சோ்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

சென்னை: ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சோ்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சககத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊரக மேம்பாடு மற்றும் புத்துணா்ச்சி இயக்கத்தின் அலுவலகம் டாக்டா் ராஜேந்திர பிரசாத் சாலை, புது தில்லி, 110001 என்ற முகவரியில் இயங்குவதாகக் கூறி, ஒரு அமைப்பு ஆள்சோ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு http://nrdrn.com,http://nrdrm.com, www.nrdrmvacancy.com, என்ற இணைய தளங்களையும் நடத்தி வருகிறது.

இது மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு இல்லை. மேலும், இந்த அமைச்சகம் மற்றும் அதன் அதிகாரிகளின் பெயரில் எந்த ஒரு ஆள் சோ்ப்பு நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் இம்மாதிரியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இத்துறையில் ஆள்சோ்ப்பு பற்றிய தகவல்கள், அதன் அதிகாரப்பூா்வ இணையதளமான ழ்ன்ழ்ஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் மட்டுமே அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com