மக்களை சண்டைபோட வைத்துவிடுவீர்கள்: திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சையில் மக்களை சண்டைபோட வைத்துவிடுவீர்கள் என்று நீதிமன்றம் கருத்து.
மதுரை கிளை நீதிமன்றம்
மதுரை கிளை நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த மதுரை கிளை நீதிமன்றம், திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி?

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில், கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியில் திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோவில் தெருவில் புதியதாக மலைமேல் உள்ள தர்காவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகையினை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக, திருக்கோயில் மூலம் திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் மேற்படி வாசகம் நீக்கம் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 25-ல் காலை 09.00 மணியளவில் கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பதற்கு 5 நபர்கள் மலையேறச் சென்றபோது அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால், கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து இஸ்லாம் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில், டிசம்பர் 31 ஆம் தேதி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் அமைதிப்பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் நடைமுறையிலுள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும், மேற்படி மலை மீது கந்தூரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, போதிய ஆதார ஆவணங்களை மேற்படி தர்கா தரப்பினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் இந்நேர்வு தொடர்பாக உரிய நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடிக்கொள்ளவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இது தோடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com