
நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் அந்த பள்ளி செயல்படவே தொடங்கவில்லை. ஒரே ஒரு மாணவர்கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக அண்ணாமலை கூறி வருகிறார்.
அரசியல் பரபரப்புக்காக அண்ணாமலை தினமும் எதையாவது பேசி வருகிறார். இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்றார்.
முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திருமாவளவன் சென்னையில் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்துவதாகக் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது பதிவில், "திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூஸ்டார் என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், திருமாவளவன்தான்.
அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.