
தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை (பிப். 23) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.