
கோயம்புத்தூர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(பிப். 25) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் மற்றும் பாரதியார் முகம் அச்சிடப்பட்ட போர்வை அணிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இன்னொருபுறம், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகத் திரண்டு கறுப்புக்கொடி காட்டியதுடன் ‘கோ பேக் அமித் ஷா’ வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 நாள்கள் கோவையில் தங்கும் அமித் ஷா கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை(பிப். 26) காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறாா். அதையடுத்து, அங்கிருந்தவாறே ராமநாதபுரம் மற்றும் திருநெநெல்வேலி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.
கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை(பிப். 26) மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்றுவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்புகிறாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தில்லிக்கு திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.