

சென்னை: அரையாண்டு விடுமுறை இன்றுடன்(ஜன. 1) முடிவடையும் நிலையில் நாளை(ஜன. 2) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை நாள்கள் நீட்டிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் புரளி என்று இதன்மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன. 2-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.