புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! -முதல்வர் ஸ்டாலின்

புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்DIPR
Published on
Updated on
1 min read

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

புத்தாண்டை முன்னிட்டு முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்! 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமாகும் போது, ​​அன்பு, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024 இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம்.

அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!”எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com