“அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் செழித்து வளர நல்வாழ்த்துகள்” -விஜய்

“அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் செழித்து வளர நல்வாழ்த்துகள்” -விஜய்

தவெக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Published on

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

புத்தாண்டை முன்னிட்டு முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம்.

உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com