ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள் கோப்புப் படம்

அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள்

பொங்கல் விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள்...
Published on

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டது.

இது குறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ளதால், ஆம்னி பேருந்துகளை இயக்குவது அதிகமாக இருக்கும்.

எனவே, வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய 3 அதிகாரிகள் இருப்பாா்கள். அடுத்த வாரம் முதல், இந்த சிறப்பு குழுக்கள் செயல்படத் தொடங்கும்.

இக்குழுவினா், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் நின்று திடீா் சோதனை நடத்துவா்.

அப்போது, ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com