மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநாட்டில் பேசுகிறார் புதிய மாநிலச் செயலர் பெ . சண்முகம்
மாநாட்டில் பேசுகிறார் புதிய மாநிலச் செயலர் பெ . சண்முகம்தினமணி
Published on
Updated on
2 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் இன்று (ஜன. 5) தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு நிறைவில் புதிய மாநிலச் செயலராக பெ . சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். இவர், தற்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு ஜன. 3 ஆம் தேதி தொடங்கியது.

இந்த மாநாட்டை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பேபி தொடங்கி வைத்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் பகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்ற பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்ற விழுப்புரம் நகராட்சித்திடல் பகுதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்காரத், கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

மாநாட்டின் நிறைவு நாளில்...
மாநாட்டின் நிறைவு நாளில்...

பிரதிநிதிகள் மாநாடு: இரண்டாவது நாளான சனிக்கிழமை (ஜன. 4) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வாழ்த்துரை வழங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

இதைத் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டில் பேச அழைக்கப்பட்டனர். கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டியவை, எதிர்காலத் திட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிடுதல் போன்றவை குறித்து பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.ஏ. பேபி, பிருந்தாகாரத், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, டி. ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

மாநாட்டின் நிறைவு நாளில்...
மாநாட்டின் நிறைவு நாளில்...

மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய மாநிலக்குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுவினரும், அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாநிலக் குழுவினர் கூடி புதிய மாநிலச் செயலரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி மாநிலச் செயலராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டுத் தொகுப்புரையை மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நிறைவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து புதிய மாநிலச் செயலர் பெ .சண்முகம் நிறைவுரையாற்றினார்.

நிறைவுரையாற்றும் பெ. சண்முகம்
நிறைவுரையாற்றும் பெ. சண்முகம்

பெ. சண்முகம் யார்?

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த பெ. சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர்.

பெ.சண்முகத்தின் சமூகப் பணிகளை பாராட்டி தமிழக அரசு இவருக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தது.

இதையும் படிக்க | திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை: பெ. சண்முகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com