கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்!

இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் 6,36,12,950 கோடி எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர்கள் 3.24 கோடி, 3ஆம் பாலினத்தவர் 9, 120 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்(நாகை) தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர்.

விளக்கத்தை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்ட ஆளுநர்! என்ன மாற்றப்பட்டிருந்தது?

அங்கு 1,76,505 வாக்காளர்களும், அதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம்(சென்னை) 1,78,980 வாக்காளர்களும் உள்ளனர். அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது.

அங்கு மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் கவுண்டம்பாளையம்(கோவை) தொகுதியில் மொத்தம் 4,91,143 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com