உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!
அதன்படி, 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.