![பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.](http://media.assettype.com/dinamani%2F2025-01-09%2Fmwqrlics%2Fpongal2.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு விநியோகித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுநீளக் கரும்பு ஆகியன பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன. 13-ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே அரிசி பெறும் அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.