ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது.

அகில இந்திய காங்கிரஸுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.

2026 சட்டப்பேரவை பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com