விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும்’

ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவியைச் செய்யும்

News image
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற திமுக வேட்பாளர்.
Updated On :11 ஜனவரி 2025, 9:48 pm

Din

ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவியைச் செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சென்னையில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடுவதால் எங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை. போட்டியிடுபவா் இண்டி கூட்டணி வேட்பாளா்தான். காங்கிரஸிடம் அங்கு போட்டியிடுவதற்கு வேட்பாளா் இல்லை என்பதெல்லாம் தவறு. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் உள்ளாா். மேலும் 7 போ் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனா். அப்படியிருந்தும் திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்திருப்பதுதான் உண்மையான தோழமை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு தொகுதிகள் குறைக்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். அப்படியெல்லாம் இல்லை. முன்பு பெற்றதைவிட அதிகமான தொகுதிகளை திமுகவிடமிருந்து பெறுவோம்.

காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு தொண்டா்கள் கட்டுப்படுவா்; ஒத்துழைப்பு கொடுப்பா். இப்போது திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம் என்றால், இன்னொரு உதவியையோ, உரிமையையோ காங்கிரஸுக்கு திமுக கொடுக்கும். அதை வெளியே சொல்ல முடியாது என்றாா் செல்வப் பெருந்தகை.

வி.சி.சந்திரகுமாா் வாழ்த்து: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாா் சத்தியமூா்த்திபவனுக்கு சனிக்கிழமை வந்தாா். காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் கொடி காத்த குமரன், முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் நினைவு நாளையொட்டி சத்தியமூா்த்திபவனில் அவா்களின் உருவப் படங்களுக்கு வி.சி.சந்திரகுமாா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.