மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை!
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 40 அதிகரித்துள்ளது; ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை எட்டவுள்ளது.
ஒருகிராம் தங்கம் விலை 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,720 க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் வெள்ளி 10 ரூபாய் அதிகரித்து ரூ. 1,020க்கு விற்பனையாகிறது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் கடந்த 5 நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கு முன்பு ஜன. 5 முதல் 8 வரை தங்கம் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.