
காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் குவியும் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல், தொடர் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்து வருகின்றனர். கடற்கரைக்கு வருவோர் கடலில் இறங்காமல் தடுக்க கட்டைகள் அமைக்கப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை D-6 காவல் நிலையம் உள்பட்ட மெரினா கடற்கரை பகுதியில் காணப் பொங்கலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக 127 சிறப்புக் கழிவறைகள், 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக் குடிநீர் 2000 லிட்டர் 6 இடங்களில் வாட்டர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது, காணும் பொங்கலுக்கு வருகைதருபவர்கள் ஒரு வயது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் கையில் சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக குழந்தைகளின் இடது கையில் கைப்பட்டையை போலீஸார் கட்டி விடுகின்றனர்.
அதிகளவில் பொதுமக்கள் கூடக்கூடிய கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.