
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 2006 வரையும் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு கட்சிப் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியிருந்த பிஆர்.சுந்தரம் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.