கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: ஓராண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு

மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஓராண்டைக் கடந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் சேவைகளை அவா்களது வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் நோக்கத்துடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மக்களிடம் இருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com