பரந்தூரில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை
பரந்தூர் நோக்கி வரும் தவெக தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடுபவர்களை தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை சந்திக்கிறார். இந்த சந்திப்பு பிற்பகல் 12 மணியளவில் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து பரந்தூருக்கு இன்று காலை காரில் புறப்பட்டார்.
ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று ஒருவர் சுட்டுக்கொலை!
இந்த நிலையில் பரந்தூர் நோக்கி வரும் தவெக தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
13 கிராம மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாக தகவல் தெரியவந்துள்ளது. '
அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின் மண்டபத்திற்குள் காவல்துறை அனுமதி அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.