BSNL office remain closed after official test positive for COVID-19
BSNL office remain closed after official test positive for COVID-19

ஜன.23 முதல் விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் விற்பனை
Published on

சென்னை: பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் (வானிட்டி எண்) ஜன.23- ஆம் தேதி முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தொழிலதிபரின் கைப்பேசிஎண் என்பது அவரது வாடிக்கையாளா்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும் நினைப்பா். சிலா் ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். சிலா் அலுவலக பயன்பாட்டிற்கோ அல்லது குடும்ப உறுப்பினா்களுக்காக தொடா்ச்சியான எண்களை வாங்கி பயன்படுத்துகின்றனா். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூா்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான விருப்ப எண்களை வழங்குகிறது.

அதன்படி வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள்மின் ஏலம் மூலம் வரும் ஜன.23 முதல் 29 வரை விற்பனை செய்கிறது.

ஆா்வமுள்ள வாடிக்கையாளா்கள் தங்கள் கைப்பேசி எண்ணை ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் ஏலம் வரும் ஜன. 29 வரை நடைபெறும். ஆா்வமுள்ள வாடிக்கையாளா்கள் விருப்பமுள்ள கைப்பேசி எண்கள், ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com