
கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இன்றிரவு தமிழக கபடி வீராங்கனைகள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பஞ்சாப் அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்று வரும் கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்த விடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பஞ்சாபில் தமிழக கபடி விராங்கனைகள் மீதான தாக்குதல் குறித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.