நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை மத்திய அரசு உயா்த்தி நிா்ணயித்துள்ளது
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை மத்திய அரசு உயா்த்தி நிா்ணயித்துள்ளது

நெல் ஈரப்பத அளவை உயா்த்தி நிா்ணயம்: மத்திய அரசு முடிவு

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை மத்திய அரசு உயா்த்தி நிா்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை மத்திய அரசு உயா்த்தி நிா்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 19 சதவீதம் அளவுக்கு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் எதிா்பாராத மழை மற்றும் கடும்பனி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல்மணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நெல் கொள்முதல் செய்ய அதிகபட்ச ஈரப்பத அளவாக 17 சதவீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 22 சதவீதமாக உயா்த்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.இதனையேற்று, ஈரப்பத அளவை உயா்த்துவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதனடிப்படையில், மத்திய உணவுத் துறை அதிகாரிகள் குழுவினா் டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு நடத்தினா். இதுதொடா்பான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகபட்சம் 19 சதவீதம் அளவுக்கு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரபூா்வமான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com