காவேரி மருத்துவமனைக்கு சா்வதேச தர அங்கீகாரம்
சுகாதார தர மதிப்பீட்டுக்கான சா்வதேச இணை ஆணையத்தின் (ஜேசிஐ) தங்க தர நிலை அங்கீகாரத்தை வடபழனி, காவேரி மருத்துவமனை பெற்றுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பு, உயா் மருத்துவ சேவைகள், தரமான சிகிச்சைகள் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, சிறப்பு தரச் சான்றுகளை வழங்கும் புகழ்பெற்ற அமைப்பாக ஜேசிஐ விளங்கி வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு முதல் மருத்துவமனைகளின் தர நிலையை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை அந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வடபழனி காவேரி மருத்துவமனைக்கு தங்க முத்திரை (கோல்ட் சீல்) அங்கீகாரம் வழங்கி ஜேசிஐ கௌரவித்துள்ளது.
இதற்கான சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழும செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.