காவல் விசாரணையில் மரணம்: “இது 25-வது முறை...” -எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரசின் அலட்சியப் போக்கு - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
Case transferred to CBCID
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
Published on
Updated on
1 min read

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இன்று(ஜூலை 1) மாலை தொலைபேசி வழியாக அறுதல் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலிலின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இன்று(ஜூலை 1) மாலை தொலைபேசி வழியாக அறுதல் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலின், அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த முதல்வர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்!கொலை செய்தது உங்கள் அரசு. "மன்னித்து விடுங்கள்" என்பதுதான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் முதல்வருக்கு?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?”

“என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ? வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?

அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு எஃப்.ஐ.ஆர்., கைது எல்லாம் நடக்கிறது.”

“உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!” என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com