annamalai
தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Published on

அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிா் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவா் யாா், யாரிடம் பேசினாா் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு அழைப்பாணை அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இதேபோல வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

ஞானசேகரனுக்கு எதிரான வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றமும் தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மனுதாரா் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாதுஎனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com