காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

காவல்துறைக்கு திமுக எம்எல்ஏ இருதயராஜ் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இருதயராஜ்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இருதயராஜ்படம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 காவலர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், இளைஞர் மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருச்சி கிழக்கு திமுக எம்எல்ஏ இருதயராஜ் காவல்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி, இளைஞர், 27 வயதே ஆன அஜித் குமார் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததிருப்பது மிக மிகக் கண்டனத்துக்கு உரியது.

காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள். ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா என்ன?

மனித உயிரின் மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்ட தமிழக காவல்துறையை சேர்ந்த இவர்களைக் கைது செய்து உத்தரவிட்டிருக்கிறது அரசு. கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா? சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா? எப்படி பார்த்தாலும் விசாரணை என்கிற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது.

காவல்துறை அஜித்குமாரை தாக்கும் அந்த விடியோ காட்சியைப் பார்த்தால் திருட்டு வழக்கிற்கு இப்படிதான் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்கிற ரீதியில் ரத்தம் உறைந்து போகிறது. தளபதியின் பொற்கால ஆட்சியில் மக்கள் பணியே மகேசன் பணி என்று ஒவ்வொரு மாவட்டமும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து அவர்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர்.

காவல்துறையினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்குப் பாராட்டுக்கள். கட்சியில் யாரும் தவறு செய்தால் பல வருடம் நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் காவல்துறை மீது மட்டும் ஏன் இந்த மெண்மை போக்கு? இவர்கள் உடனடியாகக் கட்டாயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

டிஜிபி சார், இந்த காவலர்கள் எந்த கழிப்பறை வழுக்குமோ அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் அல்லது எங்கு தப்பித்து செல்ல வசதியாக இருக்குமோ அங்கு சென்று விசாரிக்கபடவேண்டும். கஷ்டப்பட்டு கட்சியினர் உழைத்த பெயரை 5 நிமிடங்கள்ல் கெடுத்துவிடுகிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ இருதயராஜ் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கிய பதிவு
திமுக எம்எல்ஏ இருதயராஜ் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கிய பதிவு

இதனிடையே, சிறிது நேரத்தில் எக்ஸ் பக்கத்தில் இருந்து காவல்துறைக்கு எதிரான தனது பதிவை இருதயராஜ் நீக்கினார்.

Summary

Trichy East Assembly Member Irudayaraj has condemned the incident in which Thiruppuvanam youth Ajith Kumar was killed by police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com