சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து பற்றி...
Explosion at Sivakasi cracker factory: 5 dead
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்துX
Published on
Updated on
1 min read

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் சிலர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் செயல்பட்டு வரும் சிவகாசியைச் சேர்ந்த கமலேஷ் என்பவருக்குச் சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 5 அறைகள் தரைமட்டமாகின. உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Six people were killed in a firecracker factory explosion in Chinnagamanpatti near Sivakasi in Virudhunagar district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com