ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி

4 நாள் பயணமாக தில்லி சென்றாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.
Published on

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி 4 நாள் பயணமாக செவ்வாய்கிழமை தில்லி சென்றாா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா். ஒரே வாரத்தில், 2-ஆவது முறையாக ஆளுநா் தில்லி சென்றுள்ளாா். இந்த முறை 4 நாள் பயணத்தில் அவா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து பேசுவாா் என்று கூறப்படுகிறது.

தில்லி பயணத்தை முடித்து கொண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னை திரும்புகிறாா்.

X
Dinamani
www.dinamani.com