தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் பற்றி...
Attack on auto driver at Theni police station: 5 transferred to armed forces
தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் (விடியோ படம்)X
Published on
Updated on
1 min read

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் ஜனவரி 14 ஆம் தேதி மதுபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புகாரில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் வைத்து ஆட்டோ ஓட்டுநர், காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் அபூதுல்யா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி, வாலி உள்பட 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Five people, including a police inspector, have been transferred to the armed forces in connection with the attack on an auto driver at the Theni police station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com