Temperatures will rise for two days
வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.54 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரில் 102.56 டிகிரி என 2 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை: மேற்கு திசைகாற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 2 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 2) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com