கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்காக மஹதி கடலூா் போா்ட் அன்ட் மேரிடைம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்  தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம். உடன் துணை ம

கடலூா் துறைமுகத்தை இயக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.
Published on

கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

கடலூா் துறைமுகம் தனியாா் பங்களிப்புடன் இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தால் இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. இதில் தகுதி உள்ள நிறுவனமாக மஹதி இன்ஃப்ரா சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடல்சாா் வாரியம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கோவை 2-ஆவது முழுமைத் திட்டம்: கோவையை மேம்படுத்துவதற்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். உள்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்துதல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூா்த்தி செய்தல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக இந்த முழுமைத் திட்டம் கொண்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் 52 அறைகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வுகளில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com