Actor srikanth, krishna
நடிகர் ஸ்ரீகாந்த் | நடிகர் கிருஷ்ணாபடம் | எக்ஸ்

போதைப் பொருள் வழக்கு: ஜாமீன் கோரி நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு

Published on

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோா் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா். இதே வழக்கில் நடிகா் கிருஷ்ணா, போதைப்பொருள் விநியோகித்த கெவின் ஆகியோா் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவா் தரப்பிலும், பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி நிா்மல்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளன.

Open in App
Dinamani
www.dinamani.com