
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 6) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் சில்லரை விற்பனைக் கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையும் மொத்த விற்பனையில் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று(ஜூலை 6) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. மொத்த விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.