/

தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?

தவெக தலைவர் விஜய் பயணிக்கும் தனியார் ஜெட் விலை மற்றும் வாடகை பற்றிய தகவல்கள்..

News image

தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)

Updated On :7 ஜூலை 2025, 4:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஒரே நேரத்தில் சினிமா துறையிலும், அரசியலிலும் பயணித்து வரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அண்மைக் காலமாக பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

அவ்வப்போது படப்பிடிப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க விஜய் பல்வேறு ஊர்களுக்கும் பயணிக்க வேண்டி இருப்பதால், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணித்து வருகிறார்.

ஹாக்கர் 800எக்ஸ்பி என்ற ஜெட் விமானம், விஜய்க்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அது எந்தவிதத்திலும் உறுதி செய்யப்படவில்லை.

பெரும்பாலும், அவர் திரைப்பட படப்பிடிப்புகள், அரசியல் நிகழ்வுகளுக்கு, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த ஜெட் விமானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8 கோடி என்றும், ஒரு நாளைக்கு இதில் பயணிக்க வாடகை என்றால், ரூ.14 லட்சம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெட் விமானத்தின் உள்ளமைப்புகளை, தலைவர்களுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் மாற்றியிருந்தால், அதற்கான விலை இன்னும் சில கோடிகளைத் தொடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது விமானத்தின் விலை மற்றும் வாடகைதான். அது மட்டுமல்லாமல், இந்த விமானத்தின் பராமரிப்பு செலவு, விமானி, பணிப்பெண்களுக்கான ஊதியம் எல்லாம் பார்த்தால் பயன்பாட்டுக் கட்டணமே சில லட்சங்கள் எகிறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 8-14 பேர் வரை பயணிக்கலாம். சொகுசு நாற்காலிகள், ஆலோசனை அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்கள், சிறு மதுபானக் கூடம், செயற்கைக்கோளில் இயங்கும் தொலைபேசி வசதிகள் இருக்கும். இந்த விமான பயணத்துக்கு, 2 விமானிகள், தேவைக்கு ஏற்ப 1 அல்லது 2 பணிப்பெண்கள் இருப்பர்.

அண்மையில், படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்று படப்பிடிப்பு முடித்துவிட்டு, அவர் மதுரையில் இருந்து சென்னைக்குத் திரும்பவும் இந்த ஜெட்டைத்தான் பயன்படுத்தியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.