
முதல்வர் ஸ்டாலின் நாளை(ஜூலை 9) முதல் இரண்டு நாள்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
திருவாரூா் மாவட்டத்துக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, பிற்பகல் திருச்சியில் இருந்து காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்துக்கு வந்து, தங்கி ஓய்வெடுக்கிறாா். அன்று மாலை காட்டூரில் இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துா்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.
தொடா்ந்து, மேம்பாலம் பகுதிக்கு வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். ஜூலை 10-ஆம் தேதி காலை எஸ்எஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
ரெட் ஜோன்
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, முக்கிய விருந்தினா்கள் வரும் வழித்தடம் ‘ரெட் ஜோன்’(சிவப்பு மண்டலம்) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழித்தடத்தில் ட்ரோன் கேமரா, ரிமோட் மூலம் இயங்கும் வான்வெளி சாதனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.