
வைகோ நன்றி மறக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், வெள்ளையின் ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் அழகுமுத்துக்கோன், மார்பை பிளந்த போதும் அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.
தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் லாக்அப் மரணங்கள் என அதிகரித்து வருகிறன.
இன்றைக்கு இந்த சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு கூட சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என விமர்சித்தார். வைகோ நன்றி மறப்பது நல்லது அல்ல, திமுகவில் இருந்து அவர் பிரிந்து வந்த போது அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான், ஜெயலலிதாவால்தான் அங்கீகாரம் கிடைத்தது என்பது அவர்களுக்கே தெரியும்.
கொஞ்சம் கூட வாய் கூசாமல் மறைந்த தலைவரை இழிவுபடுத்தி பேசுவது அண்ணன் அவர்களுக்கு நல்லதல்ல, திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த போது என்னென்ன விமர்சனங்கள் வைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
அழகுமுத்துக்கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா, தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.