
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தலைமையிலான பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சாலைவலத்தையும், முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக, 26 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.