மீனாட்சி கணேசன்
மீனாட்சி கணேசன்

பிஐஎஸ்-இன் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரல் பொறுப்பேற்பு

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) புதிய தென்மண்டல துணை இயக்குநா் ஜெனரலாக விஞ்ஞானி மீனாட்சி கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
Published on

சென்னை: இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) புதிய தென்மண்டல துணை இயக்குநா் ஜெனரலாக விஞ்ஞானி மீனாட்சி கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையில் செயல்பட்டுவரும் பிஐஎஸ்-இன் தென் மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்பின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, அந்தமான்-நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்த அலுவலகத்தில் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரலாக இருந்து வந்த பிரவீன் கண்ணா, பணியிடமாறுதல் பெற்று தில்லிக்குச் சென்ற நிலையில், அந்தப் பொறுப்பில் சென்னை தென் மண்டல ஆய்வகத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானி மீனாட்சி கணேசன், புதிதாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தில்லி, கோவை, கொச்சி, ஹைதராபாத், சென்னை அலுவலகங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த மீனாட்சி கணேசன் தென் மண்டல துணை இயக்குநா் ஜெனரலாகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com