பல கோடி மனங்களை கவர்ந்தவர்! சரோஜா தேவி மறைவுக்கு ரஜினி இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு ரஜினி இரங்கல்...
சரோஜா தேவி மறைவுக்கு ரஜினி இரங்கல்
சரோஜா தேவி மறைவுக்கு ரஜினி இரங்கல்
Published on
Updated on
1 min read

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவுக்கு திரைத் துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கதா சங்கமம் என்ற திரைப்படத்தில் ரஜினியும் சரோஜா தேவியும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Rajinikanth has expressed his condolences on the demise of veteran actress Saroja Devi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com