பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...
காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.

அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

The Chief Minister has praised Kamaraj for not only providing mid-day meals in schools, but also for laying the foundation for a century-long educational dream.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com