
சிதம்பரம்: சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிதம்பரம் நகருக்கு உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு சென்னை தாம்பரத்தில் இருந்து பாம்பன்-இராமேஸ்வரம் விரைவு ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார்.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய முதல்வர் செவ்வாய்க்கிழமை காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், துரை.ரவிக்குமார் எம்பி, ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம் சென்றிருக்கும் முதல்வர்
தமிழ்நாட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.
இன்று காலை காலை 9 மணியளவில், காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினா் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.